2 Sept 2015

பாசிக்குடா கடலில் மூழ்கி பௌத்த துறவி பலி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
22  வயதான தெனிகே சந்தன எனும் பௌத்த துறவியே இவ்வாறு நேற்று மாலை நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.
கடந்த 30ம் திகதி கொழுப்பு பல்கலைக் கழகத்தில் இருந்து புறப்பட்ட 34 பௌத்த பிக்கு மாணவர்கள் பல இடங்களுக்கும் சென்று செவ்வாய்கிழமை பாசிக்குடாவிற்கு வந்து குளிக்கும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இவர் குருணாகல் கிரிவல ஸ்ரீ அரோகா ராமய விகாரையைச் சேர்ந்தவர் என்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் என்றும் கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்தவரின் சடலம் மரண பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: