9 Sept 2015

நீர் வற்றிய நிலையில் குளங்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் பெருமளவில் வற்றிவிட்டதாக மாகாண நீர்ப்பாசன திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் எம்.வடிவேல் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் 14 நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் உள்ளன.அவற்றுள் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் 5 குளங்களும் ஏனைய இடங்களிலும் 9 குளங்களும் உள்ளன.
இவற்றில் மதுரங்கேணி பெரிய குளம், மகிழடித்தீவு குளம்,பழுகாமம் குளம், சேவகப்பற்று குளம், போரதீவு குளம் மற்றும் மகிழூர் குளம் ஆகிய குளங்கள் முற்றாக வற்றிவிட்டன. கடுக்காமுளை குளம் தற்போது 5 அடி தண்ணீரை மாத்திரமே கொண்டுள்ளது.
இதேவேளை, புழுகுணாண, அடைச்சகல் போன்ற குளங்களும் பெருமளவில் வற்றிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த குளப்பிரதேசங்கள் வரட்சி காரணமாக பெரிதும் வரண்டு காணப்படுவதுடன் வயல் நிலங்களும் வரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 
SHARE

Author: verified_user

0 Comments: