நான் இயக்கத்தில் இருந்தவன். போராட்ட இயக்கத்தில் அல்ல சாரணர் இயக்கத்தில்தான் நான் இருந்தவன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் (அமல்) தெரிவித்துள்ளார்.
எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் எந்தவிதமான போராட்ட இயக்கங்களிலும் இருக்கவில்லை நான் கல்விப் புலத்திலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை அறிவு ரீதியாக வளர்த்துவிட்டவன், இதனைவிடுத்து, நான் சாரணர் இயக்கத்தில் மாத்திரம்தான் இருந்தவன் என்னைத் தூற்றியவர்களுக்கு, இந்த தேர்தல் மூலம் மக்கள் என்னை வெற்றிபெறவைத்து பதிலடி கொடுத்துள்ளார்கள்.
நான் மக்களின் சேவகன் என்னை ஆதரித்த மக்களின் பாதம் பணிகின்றேன் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment