மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வக்கியல்லை 35 ஆம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (25) அதிகாலை காட்டு யானைத் தாக்குதலினால் இக்கிராமத்தைச் குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டின் கூரை பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் நித்திரைத் தூக்கத்தில் இருந்த போது ஏதோ ஒரு பாரிய சத்தம் கேட்டது. திடிரென நித்திரையைவிட்டெழும்பிப் பார்த்தபோது எனது வீட்டின் முன்பகுதிக்குள் இருந்த தவிடு மூடைகள் இரண்டை காட்டு யானை யொன்று சாப்பிடுவதற்கு முயற்சித்தது. நானும் எனது மகனும் இதனை விரட்டுவதற்கு பாரிய முயற்சிகள் செய்து யானையை விரட்டினோம். ஆத்திரமடைந்த காட்டு யானை மீண்டும் எங்களைத் துரத்தி தாக்க முற்பட்டது. நாங்கள் இருவரும் வீட்டிற்குள் மீண்டும் புகுந்தோம். எங்களை துரத்தி வந்த யானை வீட்டின் கூரையை சேதப்படுத்தியது. இதனால் வீட்டின் முன்பகுதியில் உள்ள 10 கூரை சீற், கைமரங்கள் என்பன காட்டு யானையினால் சுக்கு நூறாக்கப்பட்டுள்து.
இது சம்பந்தமாக கிராம சேவை உத்தியோகத்தர், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் மற்றும், வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திலும், ஆகியவற்றிற்கு இது சம்பந்தமாக முறைப்பாடு செய்துள்ளோம். ஏன பாதிக்கபடப் பட்ட கந்தையா ஆறுமுகம் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைத் தாக்குதலினால் பலர் பல தாக்குதல்களுக்கு உட்பட்டு பலியாகி உள்ளதுடன் பலர் காயம் அடைந்தும், வீட்டு உடமைகளையும், பயிர்களையும் சேதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதனைக் கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் காட்டு யானைகளை பொதுமக்களின் இருப்பிடத்திலிருந்து மற்றாக விரட்டுவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமத்திலுள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்துடன் காட்டு யானைப் பிரச்சினை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
0 Comments:
Post a Comment