திருகோணமலை குச்சவெளிபிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெண்கள் பங்கேற்கும் பொது அமைப்புகள் இணைந்து ஆரம்பித்த பெண்கள் இணைய வலையமைப்பின் மாதாந்தக் கூட்டம் திரியாய் பலநோக்கு கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்ஒவ்வொருகிராமங்களிலிருந்தும் மூவரடங்கிய 30 பேர் கலந்து கொண்டு யுத்தத்திற்குப் பின்னரான மீள்குடியேற்றக் கிராமங்களின் மாதர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டன
இதன் போது விசேட பிரதிநிதியாக அகம் நிறுவனத்தின் மதியுரைஞர் பொ.சட்சிவானந்தம் கலந்து கொண்டு சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது அப்பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்குச் சமர்ப்பித்து எவ்வாறு தீரவு காண்பது பற்றி ஆலோசனையை வழங்கினார்.
இதில் பின்வரும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டன.
1.மீளக்குடியேறிய திரியாய் கிராமத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளன.சுற்றுச் சுழலில் இதுவரை 11 பேர் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடாத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது பனம்பழம் பருவகாலம் ஆரம்பித்துள்ளதால் யானைகள் கிராமங்களை நோக்கிப் படையெடுக்கின்றன. என இங்கு தெரிவிக்கப்பட்டன.யானை பாதுகாப்பு வேலி போடப்பட வேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டது.
2.2010 ஆம் ஆண்டு மீளக்குடியேற்றப்பட்ட நூற்றுக்குமேற்பட்ட குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கப்படவில்லை எனவும்
3.மீள்குடியேற்றப்பட்ட 300 க்கு மேற்பட்டவர்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை இவ்விடயம் சம்மந்தமாக எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனின் நேரடிக்கவனத்திற்குக் கொண்டு வந்து எதிர்வரும் 19 ஆம் திகதி விளக்கமளிப்பதென இங்கு தீர்மானிக்கப்பட்டன.
இதே வேளை திரியாய் மகாவித்தியாலய அதிபர் சௌந்தரராஜா கல்விப்பிரச்சினை சம்மந்தமாகவும் எடுத்துக் கூறினார்.
0 Comments:
Post a Comment