(கமல்)
முந்நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மட்டக்களப்பு -எருவில் கண்ணகியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு முறைகள் எனும் நூல் மற்றும், இறுவெட்டு வெளியீட்டு விழா எருவில் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் அதிபர் சி.சத்தியநாதன் தலைமையில் திங்கட் கிழமை (07) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரின் தெற்கே 16 மைல் தொலைவில் அமைந்துள்ள எருவில கிராமத்தில், இற்றைக்கு சுமார் முன்நூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாக கணப்படும் கண்ணகியம்மன் ஆலயத்தின் சடங்குமுறை, கண்ணகியம்மன் வரலாற்று, அற்புதங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவே இந்நூலும், இறுவெட்டும் அமையப்பெற்றிருக்கின்றன.

எஸ். ரகுபதி என்பவரால் ஆக்கப்பட்ட இவ் வெளியீடுகளுக்கான ஆசியுரையினை அகோர சிவாச்சாரியார் இரா.கு.கோபாலசிங்கம் குருக்கள் வழங்கியிருந்தார். அறிமுக உரையினை ஓய்வு நிலை நிருவாக உத்தியோகத்தர் ஐ.சுப்பிரமணியமும், வெளியீட்டுரையை ஆசிரியர் கி.குமாரசிங்கமும், நயவுரையினை தமிழ் வளவாளர் க.பேரின்பராசா ஆசிரியரும், நிகழ்த்தியிருந்தனர்.
இறுவெட்டுற்கான பாடல் அறிமுகத்தினை கலாபூசணம் கலைச்சுடர் கோவிலூர் தணிகாசலம் குழுவினரும் நிகழ்த்தினர்.
0 Comments:
Post a Comment