(தனு)
தெட்சண கைலாயமென சிறப்புற்று விளங்கும் பழம் பெரும் பதியாம் திருப்பழுகாமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமாவேற்குடாப் பிள்ளயார் ஆலய துவஜாரோகண மஹோற்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று திங்கட் கிழமை (07) துலாலக்கின சுபமுகூர்த்த வேளையில் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்தி ப+ர்வமாக இடம்பெற்றது.
விநாயகர் வழிபாடு, புணியாவாசனம், வாஸ்துசாந்தி, என்பன இடம்பெற்று விஷேட ப+சைகளின் பின் கொடிச்சீலை உள்வீதி வலம் வந்து உற்சவகால ஆலயப் பிரதமகுரு சிவ ஸ்ரீமு.கு. விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது.
எதிர்வரும் 17.09.2015 அன்று தேரோட்டமும் 18..9.2015 இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் இவ்வாலய மஹோற்சவம் நிறைவுபெறுவுள்ளது.
0 Comments:
Post a Comment