14 Sept 2015

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகத்தான் காணப் படுகின்றார்கள் - வைத்திய அதிகாரி கு.சுகுணன்.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகத்தான் காணப் படுகின்றார்கள். சமூக பொருhளாதாரத்தில், இனரீதியில், பிரதேச ரீதியில், போன்ற பல விடையங்களில் எமது மக்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள், தலைவருமாகிய  காலம் சென்ற சி.மு.இராசமாணிக்கத்தின், நினைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “இராசமானிக்கம் மக்கள் அமைப்பு”  எனும் மக்கள் தொண்டு நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (13) களுவாஞ்சிகுடியில் இடம் பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

கல்வி, கலை, பண்பாடு, போன்ற பல விடையங்களில் எமது சமூகம் தற்போதைய நிலையில் பின்னோக்கியுள்ள  இந்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

கடந்த கால யுத்த வடுக்களைச் சுமந்தவர்களாக, யுத்தம் மற்றும், சுனாமி, போன்ற கோர அனர்தங்களின் வலியைச் சுமந்தவர்களாக எமது மக்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையிலும்கூட அரச அதிகாரிகளின் அசமந்தப்போக்குகள் காரணமாக மக்கள் இன்னும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். மக்களின் காலடிக்குச் சேவைகளைக் கொண்டு செல்வதில் அரச அதிகாதிகள் தயக்கம் காட்டுகின்றார்கள்.  

2000 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியை வருடாவருடம் மாவட்ட அபிவிருத்திகளுக்குச் செலவு செய்கின்றார்கள். ஆனால் மக்கழின் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் இல்லாமலுள்ளன.  உரிய திட்டங்கள் மக்களைச் சென்றடைவத்தில் குறைபாடுகள் காப்படுகின்றன. அரச செயற்பாடுகள் உரிய முறையில் நேர்தியாக இயங்கினால் மக்களுக்குப் பணிசெய்வதங்கு  அறக்கட்டறை அமைப்புக்கள் தேவைப்படாது. 

ஆனால் தற்போதைய நிலையில், மட்டக்களப்பு மாவட்ட எமது மக்களுக்கு  தனியார் அமைப்புக்களும், அறக்கட்டளை அமைப்புக்களும், அரச சார்பற்ற அமைப்புக்களினதும் சேவைகள் இன்றியமையாததாகவுள்ளன. 

எனவே இப்பிரதேச மக்களின் வலியை அறிந்து தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சி.மு.இராசமாணக்கத்தின் பெயரால் அவரது பிள்ளைகள் ஆரம்பித்துள்ள  “இராசமானிக்கம் மக்கள் அமைப்பின் நோக்கம் நிறைவேற வேண்டும், அவர்களது சேவை மட்டக்களப்பு மாவட்ட அடிமட்ட ஏழை மக்களுககுப் போய் சேரவேண்டும். என அவர் தெரிவித்தார்


SHARE

Author: verified_user

0 Comments: