கிழக்கில் தேரோடும் கோயில் எனப் புகழ் பெற்ற மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ திங்கட்கிழமை (14) அதிகாலை இடம்பெற்றது.
பக்தர்கள் புடைசூழ கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வரும் நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இக்கொடியேற்ற நிகழ்வில் ஈழத்தின் பல பாகங்களிலும் இருந்து பக்தர் வருகை தந்திருந்தனர்.
இவ்வாலயத்தில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4மணிக்கு தேரோட்டமும், மறுநாள்(28ம் திகதி திங்கட்கிழமை) காலை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று ஆலய உற்சவம் நிறைவு காணவிருக்கின்றது.
ஆலய கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றன.
0 Comments:
Post a Comment