அம்பாரை மாவட்டம் ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் காரணமாக ஒலுவில் கரையோரம் கடலரிப்பினால் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுவரும் அவல நிலை தோன்றியுள்ளதனை பார்வையிட சனிக்கிழமை (12) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினர் அங்கு நேரில் விஜையம் செய்தனர்.
குறிப்பிட்ட பயணத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்இ பிரதி அமைச்சர் பைஷல் காசிம்நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிஷாஹிர் மெளலானா எம்.ஐ.எம்.மன்சூர் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர்இ ஏ.எல்.தவம் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொதுமக்களும் இன்று அங்கு விஜையம் செய்தனர்.
குறிப்பிட்ட பிரச்சனை சம்மந்தமாக ஒலுவில் துறைமுக அதிகாரசபை சம்மந்தப்பட்ட குழுவினர் மற்றும் பிரதமர் ஜனாதிபதி ஆக்கியோருடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கடலரிப்பு சம்மந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டு இதுவரை நஷ்டயீடு வழங்கப்படாமல் இருக்கும் மீனவர்களுக்கு நஷ்டயீட்டினைப் அவசரமாகப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்விஜையத்தின் போது அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment