4 Sept 2015

இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ வதிவிடப் பயிற்சி

SHARE
தவத்திரு ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்குருஜீ அவர்களால் உருவாக்கப்பட்ட வாழும்கலை அமைப்பானது உலகத்திலுள்ள அனைத்து மக்களிடையே காணப்படும் மனஅழுத்தம்  கவலை  தோல்வி அன்றாடம் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றை போக்கி நிம்மதியுடனும் ஆனந்தத்துடனும் வாழ்வதற்காக தியானம் யோகாசனத்துடன் கூடிய  பலபயிற்சிகளை உலகிலே 154 நாடுகளிற்குமேல் இன மத மொழி பேதமின்றி சேவை அடிப்படையில் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் மட்டக்களப்பிலும் உள்ளவாழும்கலை அமைப்பானது தனது சேவையினை சிறப்பாக மட்டக்களப்பு மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு – மயிலம்பாவெளியில் உள்ள வாழும்கலை நம்பிக்கை கிராமம் (Art of living – Village of Hope) ஆதரவற்ற சிறுமிகளை பராமரிக்கும் காப்பகம் மற்றும் வாழும்கலைப் பயிற்சிகளை மக்களுக்கு வழங்கும் ஆச்சிரமமாக தொழிற்பட்டு வருகின்றது.

இங்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ வதிவிடப் பயிற்சி நடைபெற இருக்கின்றது. 

இப்பயிற்சியானது கிராமங்கள் நகரங்கள் என்பவற்றை வளமாகக் கட்டியெழுப்பவும் சமூகத்திற்கு சேவை செய்யும் பொறுப்பினை இளைஞர் யுவதிகள் தலைமை தாங்கிநடாத்து வதற்காக அவர்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் வலிமையையும் சக்தியினையும் வழங்கும் ஒரு சிறந்தபயிற்சியாகும். 

தவத்திரு ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்ஜீ அவர்களினால் நேரடியாக பயிற்றப்பட்ட இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் சிறந்த வளவாளர்களால் இப்பயிற்சி நடாத்தப் படுகின்றது. 

தற்போதைய நவீன சமூகமாற்றத்தால் ஏற்படு கின்ற சீரழிவிலிருந்து பாதுகாத்து இளைஞர் யுவதிகளுக்கு ஒரு சிறந்த வழியைக்காட்டுவதே இப்பயிற்சியின் நோக்கம் என்றும்இ இதன் மூலமாக பலஇளைஞர் யுவதிகள் தங்கள் வாழ்வினை சிறப்பான முறையில் அமைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருவதோடு சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்தி வருகின்ற காரணத்தினாலே தொடர்ச்சியாக இப்பயிற்சியினை வழங்கிவருவதாக இப்பயிற்சியின் இணைப்பாளர் க.அருள்நிதி தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

1 Comments:

sasi said...

nice i will surely join with this leadership program