மகாவலிஅபிவிருத்திமற்றும் சுற்றாடல் அமைச்சின்கிழ் செயற்படும் கரை யோரம் பேணல் மற்றும் மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் (IFAD & GEF) அமைப்பின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பங்குபற்றலுடன் கூடிய நீடித்து நிலைக்கத்தக் ககரையோர வலய மீளமைப்பு நிகழ்ச்சிதிட்டத்தின் மட்டக்களப்பு - கீழ்கோறளைப் பற்றுவடக்கு பிரதேச செயலாளர்பிரிவில் நெசட் வியாபார அபிவிருத்தி ஆலோசனை வழங்குனர்
அமைப்புடன் இணைந்து செயற்படுத்தப்படும் சிறுதொழில் முயற்ச்சியாண்மை மற்றும் மாற்று வாழ்வாதார மார்க்கங்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட மாடு வளர்பாளர்கள் 30 பேருக்கான மாடுவளர்ப்பு தொடர்பான தொழிநுட்பபயிற்சி நெறி வியாழக்கிழமை (03) வாகரை சூழலியல் பூங்கா சமூகமண்டபத்தில் நெசட் அமைப்பின் பிரதேச வியாபார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.கோணலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சியின் ஆரம்பநிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் செல்விஆர்.இராகுலநாயகிஇ கரையோரம் பேணல் மற்றும் மூலவளங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்றிட்ட இணைப்பாளர் அ.கோகுலதீபன்இ நெசட் அமைப்பின் கிழக்கு பிராந்திய நிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர் செ.ரமேஸ்வரன்இ வாகரைபிரதேச கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் வைத்திய அதிகாரி செல்வி.அனுசிகா வன்னியநாயக்க உட்பட பலர் கலந்து காண்டிருந்தனர்.
கால் நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி மற்றும் துறைசார் உத்தியோகஸ்தர்க ள் இதன்போது கலந்து வளவாளர்களாகக் கொண்டு இப்பயிற்சிநெறியை நடாத்தினர்.
0 Comments:
Post a Comment