அனுமதிப்பத்திரமின்றி முச்சக்கரவண்டியொன்றில் மூன்று ஆடுகளை கொண்டுசென்றதாகக் கூறப்படும் இருவரை செவ்வாய்க்கிழமை (01) இரவு கைதுசெய்ததுடன், இந்த ஆடுகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியாவூடாக திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த இந்த முச்சக்கரவண்டியை இடைமறித்து வீதிப் போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, முச்சக்கரவண்டியில் ஆடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முச்சக்கரவண்டிச் சாரதியொருவரும் அவரது உதவியாளருமே கைதுசெய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment