திருகோணமலை மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற வரட்சியின் காரணமாக இதுவரை 6219 குடும்பங்களைச் சேர்ந்த 21264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.
இவர்களுக்கு தேவையான குடிநீரை தற்போது பிரதேச செயலகங்களின் ஊடாக கிரமமான முறையில் இலவசமாக விநியோகித்து வருவதாகவும் மக்கள் அவதானமாக நீரை பயன்படுத்துமாறும் அரசாங்க அதிபர் பொது மக்களை கேட்டுக் கொண்டார். அத்துடன் தொடர்ச்சியான வரட்சி நிலவும் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்படுவோரின் தாக்கம் அதிரிக்கக்கூடும் என தெரிவித்ததுடன் பிரதேச செயலாளர்களின் ஊடாக அது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment