மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான ஆகஸ்ட் மாதத்துக்கான மீளாய்வுக் கூட்டம் நேற்று(03) காலை மாவட்ட செயலகத்தில் மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராம மேம்பாட்டுக்கான திட்டம், 100 நாள் வேலைத்திட்டம், இந்திய வீட்டுத்திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனான மாவட்டத்தின் 5ஆண்டு அபிவிருத்தித்திட்டம், விசேட அபிவிருத்தித்திட்டங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் திட்டங்கள் என பல்வேறு திட்டஙகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடத்தில் 6675 ரூபா செலவில் 1204 திட்டங்கள் அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், மின்சாரம், வீதி மற்றும் பாலங்கள், கல்வி, சுகாதாரம், சமூக வசதிகள், நீர்ப்பாசனம், வீடமைப்பு, குடிநீர் விநியோகம், விவசாயம், வாழ்வாதாரம், மீன்பிடி அபிவிருத்தி, கிராம மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி, வன விலங்கு பாதுகாப்பு, சுற்றாடல், தொடர்பாடல் என அனைத:துத் துறைகள் சார்ந்தும் அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்றைய கூட்டத்தில், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்நேசராஜா, திட்டமிடல் செயலக கணக்காளர் எம்.எம்.பசீர், பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பளர்கள் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment