9 Sept 2015

மகனைத்தேடும் தாய்

SHARE
காணாமல் போன தனது மகனைக் கண்டு பிடித்துத் தருமாறு, மட்டக்களப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியைச் சேர்ந்த தாய், இளையதம்பி பார்வதி (வயது 62) புதன்கிழமை (09) ஊடக வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். 'எனது கடைசி மகன் கந்தசாமி நிதூஷன் (தற்சமயம் வயது 20) விஷேட தேவையுடையவராக இருந்ததன் காரணத்தினால், அவரை மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள ஓஷானாம் வலது குறைந்த பராமரிப்பாளர் நிலையத்தில்  அனுமதித்திருந்தேன். 
பின்னர் அவர் சற்று சுகதேகியான நிலையில் 2010ஆம் ஆண்டு வீட்டுக்கு வந்தார். எனினும், 2010.04.04 அன்று வீட்டை விட்டுச் சென்றவர் இன்னும் வீட்டுக்கு திரும்பவில்லை. அவர் என்ன ஆனார் என்றும் தெரியாது' என்று அந்த தாய் தெரிவித்துள்ளார். மேலும், 'இது பற்றி பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு போன்று பல இடங்களிலும் முறையிட்டும் என் மகனின் கதி குறித்து எந்தத் தகவலும் இல்லை. இவரைப் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் என்னிடம் சேர்ப்பிக்க உதவுங்கள்' என்றும் அந்த தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்
SHARE

Author: verified_user

0 Comments: