அனுமதிப்பத்திரமின்றி கள்ளச்சாராயம் வைத்திருந்த இருவருக்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் இன்று வியாழக்கிழமை முறையே மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய், எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
தோப்பூர் வீரமா நகரம்,பள்ளிக்குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த நபர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, மூதூர் பிரதேசங்களில் அனுமதிப்பத்திரமின்றி கள்ளச்சாராயம் வைத்திருந்த குறித்த இருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே தோப்பூர் வீரமா நகரைச் சேர்ந்த ஒருவருக்கு மூவாயிரத்து ஐந்நூறு ரூபாயும் பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு எட்டாயிரம் ரூபாயும் அபராதம் விதித்ததுடன் தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஆறுமாத கால சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment