தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுதியாக செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வவுணதீவு மக்களினால் வழங்கப்பட்ட வரவேற்று நிகழ்வில் அவர் உரையாற்றினார்.தமிழர்களுக்கான நிலையான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளும் அதேவேளை, அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment