உள்ளுராட்சிமன்ற வாரத்தையொட்டி திருகோணமலை மொறவௌ பிரதேச சபையினால் இன்று திங்கட்கிழமை (07) இலவச வைத்திய முகாம் ரொட்டவௌ பொது நூலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.
மிகவும் பின்தங்கிய கிராமமான ரொட்டவௌ கிராமத்தில் 350 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருவதுடன், பிரதேசத்தில் அதிகளவில் வைத்திய வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக அமையும் என பிரதேச சபையின் செயலாளர் ஐ.ஜூட் ராஜசிங்கம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment