கிழக்கு மாகாணத்தில் அமெரிக்க நிதி உதவியுடன் எட்டு; முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன . இப்பாடசாலைகளின் தெரிவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி சனிக்கிழமை (12) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'தான் கல்வி அமைச்சராக வருவதற்கு முன்னரே, இப்பாடசாலைகள் தெரிவு மாகாண கல்வித் திணைக்களம் ஊடாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் இன விகிதாரம் பேணப்படவில்லை என்பதை தான் அறிகின்றேன். இத்திட்டத்தை செயற்படுத்த அமெரிக்க அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைமேற்கொள்ள வந்த போது, இந்த விடயம் எனக்கு தெரிய வந்தது. அவ்வேளையில் தான் வெளிநாடு ஒன்றில் இருந்ததால் இது பற்றி எனக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கண்டனங்களுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாது போனது' என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment