திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளை பொலிஸார் மீட்ட வேளையில் அதனை படம் எடுக்கச்சென்ற ஊடகவியலாளர் மாட்டின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இன்று சனிக்கிழமை (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் 91ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த வனசிங்க முதியன்சலாகே விக்ரமசிங்க (வயது 67) என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளருக்கு முதுகெலும்பு முறிவடைந்துள்ளதாக கந்தளாய் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment