மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வேலைத் திட்டங்களை சிறந்த முறையில் கொண்டுச் செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர்; யூ.எல்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை சுகாதார அபிவிருத்தித் திட்டத்தை முன்னிட்டு, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வழிகாட்டலுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பாதுகாப்பு சம்பந்தமான தரநிர்ணய பரிசீலனை வேலைத்திட்டத்துக்கான உணவகங்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு,
சனிக்கிழமை (12) பிரதேச சபை கூட்டமண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் றகுமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு நடைபெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாம் மக்களுக்கு வழங்குகின்ற உணவுகளை சுத்தமாகவும் சுகாதாரமானதும் வழங்க வேண்டும். அப்போது தான் எமது தொழிலின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படும்.
வீதி ஓரங்களில் உணவுகளை விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் சிறந்த முறையில் முன்கொண்டு செல்வதற்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டங்கள் மிக விரையில் ஆரம்பிக்கப்படும்.
அதன் மூலம் எமது பிரதேசத்தில் நீண்ட காலமாக உள்ளூராட்சி மன்றங்களினூடாக நிறைவு செய்யப்படாத அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்படும்' என தெரிவித்தார். இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்கடர் ஏ. இஸ்ஸதீன்,
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.அலாவுதீன், பிராந்திய உணவு மருந்து பரிசோதகர்; தஸ்தகீர் ஆகியோர்; கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment