
இந்த நாட்டில் ஏற்பட்ட இழப்புக்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. இவர்களது வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், வேட்பாளருமான தவராசா கலையரசன் தெரிவித்தார்.
நற்பிட்டிமுனை மகளிர் தொத்தனி உறுப்பினர்கள் நடாத்திய ஒன்று கூடலானது நேற்று மாலை பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் அதன் தலைவர் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பாராளுமன்ற வேட்பாளருமாகிய தவராசா கலையரசன், காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.பாஸ்கரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கில் பல இடங்களை நாம் இழந்துள்ளோம். தற்போது சமாதானமான சூழல் இருந்தாலும் அந்த இடங்களை கட்டி எழுப்பலாமா என்ற கேள்விக்குறி மனதில் எழுகின்றது.
எங்களின் மக்களுடைய பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்துள்ளார்களா? என்பதை ஒவ்வொரு தமிழ் மக்களும் உள்ளத்திலிருந்து எழுப்ப வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
2008ம் ஆண்டு விரும்பாத தேர்தலை அரசாங்கம் திணித்து கிழக்கைப் பிரித்தது. அரசாங்கத்திற்கு சார்பாக ஆட்சி நடைபெற்றது.
அந்த ஆட்சியில் எங்கள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார்.
0 Comments:
Post a Comment