தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். இதில் தமிழ் மக்கள் உரிமைக்காக பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது போன்று, இளைஞர் யுவதிகள் அனைவரும் ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாட்டத்திலிருந்து தமிழ் மக்கள் சார்பாக அபிவிருத்திக்கு ஆளும் கட்சி சார்பாக தமிழர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும்.
என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இ.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்.பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் வாக்களித்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார், இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
இத்தேர்தல் மூலம், மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்டு வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான பிரச்சனைகளை நிவர்தி செய்யவும், உறுதுணையாக அமையும். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment