மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இந்த பொதுத் தேத்தலில் முன்னெப்போதுமில்லாத வகைகையில் மிகவும் ஆர்வத்துடனும், சந்தோசத்துடனும் வாக்களித்து வருகின்றனர்.
என ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சோ.கணேசமூர்தி தெரிவித்தார்.
திங்கட் கிழமை நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் தொடர்பில் களுதாவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார், இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இந்த தேர்தலின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் மாற்றம் கிடைக்கவுள்ளது. இத்தேர்தலின் மூலம் எனக்குக் கிடைக்கின்ற வெற்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குக் கிடைக்கின்ற வெற்றியாகும். எனது வெற்றிக்காகப் பாடுபடும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment