மிக நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின், இனப்பிரச்சனைக்குரிய நிரந்தர தீர்வைக் கொண்டுவரக் கூடிய தேர்தலாக இந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அமைகின்றது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் கோ.கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
மட்.செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் இன்று காலை 7 மணிக்கு அளித்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் மூலம் வடக்கு கிழக்கில் 18 தொடக்கம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் பெற்று தமிழ் மக்களின் பலத்தை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி, சர்வதேசத்தின் அழுத்தத்தினூடாக எமது இனப்பிரச்சனைக்கான நிரந்தரத், தீர்வைக் கொண்டு வரக் கூடிய தேர்தலாக இது அமைந்துள்ளது.
எனவே மட்டக்களப்பு மாட்டத்தில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப் பெரிய ஆணையை வழங்கி எமது கூட்டமைப்பின் சார்பில் 4 உறுப்பினர்களைக் கொண்டு வருவதற்கு, மக்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள். என நம்புக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment