அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவனொருவன் சனிக்கிழமை மாலை அறுகம்பைக் கடலில் மூழ்கி மரணித்ததாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சாய்ந்தமருது அலியார் வீதியைச் சேர்ந்த நவாஸ் முஹம்மத் ஷிபான் (வயது 7) எனும் சிறுவன் தனது குடும்பத்தாருடன் பொத்துவில் அறுகம்பைக் கடலுக்குச் சென்று நீராடிக் கொண்டிருக்கும்போது கடலலையில் அள்ளுண்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் சனிக்கிழமை இரவு ஏழு மணியளவில் சிறுவனின் சடலம் அறுகம்பை தோணாப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் மற்றும் கல்முனைப் பொலிஸார் இணைந்து இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment