அம்பாறை பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள மாதுஓயாப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் காட்டுயானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியானதாக பதியதலாவ பொலிஸார் தெரவித்தனர்.
கட்டுப்பஹர வீதி, கெஹெல் உல்ல, பதியதலாவையைச் சேர்ந்த ஆர்.எம்.கே. பண்டார (வயது 60) எனும் விவசாயியே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஸ்தலத்திலேயே மரணித்தவராகும்.
இவர் தனது வழமையான தனது விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது காட்டுக்குள் இருந்து வெளிக்கிளம்பிய கொம்பன் யானை இவரைத் தாக்கி ஸ்தலத்திலேயே கொன்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment