திருகோணமலை பகுதியில் ஹெரோய்ன் விற்பனை செய்த பெண்ணுக்கு திருகோணமலை உயர் நிதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன், இன்று திங்கட்கிழமை (10) மூன்று வருடங்கள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
திருகோணமலை, லவ்லேன் பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டில் ஹெரோய்ன் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு அவருக்கெதிராக திருகோணமலை உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, குறித்த பெண் குற்றவாளியாக இனங்கண்டதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு மூன்று வருடம் சிறைதண்டனையும் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்ததுடன், தண்டப்பணத்தினை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
0 Comments:
Post a Comment