கிழக்கிலங்கை மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி பேராலய வருடாந்த ப்ரம்மோற்சவப் பெருவிழா கொடியேற்ற நிகழ்வானது கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழும் மங்களம் நிறை மன்மத வருசம் ஆடித் திங்கள் 29 ஆம் நாள் கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆடி அமாவாசை புனித நன்னாளில் ப்ரம்மோற்சவ பிரதம குரு தருமை ஆகமப்பிரவீனா, ஆசீர்வாதசரபம் சிவஸ்ரீ. கைலாசநாத வாமதேவக் குருக்கள் (யாழ் - நயினை ஸ்ரீ நாகப+சணியம்மன் பேராலய ஆதீனகுரு) மற்றும் ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ.க.குகன் குருக்கள் ஆகியோரின் தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
சித்தாண்டி முருகப் பெருமானின் உற்சவ காலங்களில் தினமும் காலை 8.00 மணிக்கு சங்கற்பம், ஸ்நபன கும்ப ப+சைகள், அபிசேகம், மூலவர் ப+சை, யாக ப+சை, ஸ்தம்ப ப+சை, வசந்த மண்டப ப+சை, சுவாமி உள் வீதி உலா என்பன இடம்பெற்று நண்பகல் 12.00 மணிக்கு பகல்வேளை உற்வம் நிறைவடையவுள்ளது. அத்துடன் மாலை 5.00 மணிக்கு மூலவர் ப+சையுடன், மாவை உற்சவம் ஆரம்பமாகி, யா ப+சை, ஸ்தம்ப ப+சை, வசந்த மண்டப ப+சை இடம்பெற்று சுவாமி உள் வீதி, வெளி வீதி உலா என்பன இடம்பெற்று இரவுவேளை உற்சவ நிகழ்வுகளுடன் நிறைவடையவுள்ளது.
நடைபெறயிருக்கின்ற ஆலய வருடாந்த பெருவிழாவின் போது ஆயத்தில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் அனைத்தும் குடிமுறையிலான திருவிழாக்களாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெறயிருப்பதுடன் ஆலய திருவிழாக்களில் அதிவிசேட தினங்களான மயில்கட்டுத் திருவிழா 26, 27, 28 ஆகிய மூன்று தினங்களிலும் அதிகாலை 4.00 மணியளவில் முருகப்பெரும் வள்ளி தெய்வயானை சமேதராய் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடனும் நீல மயில் ஏறிப் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கண்கொள்ளா தெய்வீக காட்சி நடைபெறயிருக்கின்றன.
ஆலயத்தின் உற்சவ பெருவிழா இறுதி நாளாகிய ஆவணித் திங்கள் 12ம் நாள் (29.08.2015) சனிக்கிழமை ஆவணி பௌர்ணமி நன்நாளில் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெற்று அன்று மாலை 5.00 மணிக்கு கொடியிறக்கத்துடன் இவ்வாண்டுக்கான உற்சவ பெருவிழா நிறைவடையவுள்ளது.
0 Comments:
Post a Comment