19 Aug 2015

மட்டக்களப்பு - புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் விண்ணேற்பு விழா

SHARE

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த விண்ணேற்பு விழா கூட்டுத் திருப்பலி கடந்த சனிக்கிழமை (15) நடைபெற்றது.
கூட்டுத் திருப்பலியை மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா, பேராலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ஏ. தேவதாசன், அருட்பணி எம். ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோர் ஒப்புக்கொடுத்தனர். புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த கொடியேற்றம் கடந்த வியாழக்கிழமை (06) இடம்பெற்று வருடாந்த திருவிழாவின் திருச் சொரூப பவனி வெள்ளிக்கிழமை மாலை (14) இடம்பெற்றது.

பொது நவநாள் ஆராதனையை அருட்பணி எம். ஸ்ரனிஸ்லோஸ் நிகழ்த்தியதன் பின்பு திருச்சொரூப பவனி பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி மத்திய வீதி, ஆஸ்பத்திரி வீதி, கோவிந்தன் வீதி, சென். மைக்கல் வீதி, புனித அந்தோனியார் வீதி வழியாக பேராலயத்தை வந்தடைந்தது.

திருச்சொரூபம் சென்ற வீதிகளில் உள்ள குறித்த பங்கு மக்களால் அலங்கரிக்கப்பட்டு புனித மரியாளின் திருவுருவங்கள் வைக்கப்பட்டு சொரூபத்தை வரவேற்று வணங்கினர்.
SHARE

Author: verified_user

0 Comments: