23 Aug 2015

விழிப்புணர்வு நிகழ்வு

SHARE
வவுணதீவு துர்க்கா மகளிர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்த சமுதாய விழிப்புணர்வு கலாசார நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு, வவுணதீவில் நடைபெற்றது.

இதன்போது,தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளினூடான மாற்றங்களில் செல்வாக்குச் செலுத்துவதற்காக சிறுவர்களையும் இளவயதினரையும் வலுவூட்டல் எனும் திட்டத்தின் கீழ்  விழிப்புணர்வு நாடகமும் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

இயற்கை, செயற்கை இடர்களினால் பாதிப்புறும் மக்களின் சமூக மேம்பாட்டுக்காக வவுணதீவு பிரதேச பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் தோறும் சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும் வறுமையை போக்குவதற்காகவும் பெண்களுக்கு  சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காகவும்  துர்க்கா மகளிர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் உதவி வருவதாகவும் அந்நிறுவனத்தின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ. தயாளினி தெரிவித்தார் 
SHARE

Author: verified_user

0 Comments: