மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வம்மியடி ஊற்று 40ஆம் கட்டைக் கிராமத்தில் கடந்த ஜுன் மாதம் 12ஆம் திகதி கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில்; கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிவயோகராசா தனுஜன் (வயது 17) என்பவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனக்கு தெரியாமல் தனது அரிவாளை எடுத்துப் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த 33 வயதுடைய ஒருவர், காத்திருந்து கடந்த ஜுன் மாதம் 12ஆம் திகதி தனுஜனை வழிமறித்து கோடரியால் தாக்கியுள்ளார். இதன் பின்னர் கோடரியுடன் சென்று சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்தார். படுகாயமடைந்த தனுஜன்; கண்டி போதனா வைத்தியசாலையில் 73 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்தார்.
0 Comments:
Post a Comment