28 Aug 2015

வரலெட்சுமி விரதம் (வீடீயோ)

SHARE

வரலெட்சுமி விரதம் இன்று வெள்ளிக் கிழமை (28) இந்து ஆலயங்களில் மிகவும் சிறப்பான முறையில் அனுஸ்ட்டிக்கப் படுகின்றது.

இவ்வராம் வருடத்தில் ஒருநாள் மாத்திரம் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கிழக்கில் மிகவும் பிரசித்தி
வாய்ந்த மட்டக்களப்பு – களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு இவ்விரத்ததை அனுஸ்ட்டித்தனர்.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் வேல்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிரியைகள் யாவும், சிவ ஸ்ரீ சன்முகவசந்தன் குருக்கள் தலைமைல் நடைபெற்றது.
வரலெட்சுமி விரதம் அனுஸ்ட்டிப்பதனால், திருமணமாகாத கன்னிப் பெண்கள் தமக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் எனவும், திருமணமான சுமங்கலிப் பெண்கள் தமது கணவனின் நீண்ட ஆயுள் கிடைப்பதாகவும், இந்துக்களிடையே நம்பிக்கை இருந்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: