23 Aug 2015

கூரிய ஆயுதத்தினால் தாக்கியவர் கைது

SHARE

கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவரை  கொலை செய்வதற்கு முயற்சித்ததுடன், காயம் ஏற்படுத்திய  ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) கைதுசெய்ததாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.  

இதனைத் தொடர்ந்து காயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த காணிச்  சண்டையில் பழி தீர்க்கும் வகையில் மறைந்திருந்து கூரிய கத்தியினால் சந்தேக நபர்  மேற்படி நபரை சனிக்கிழமை (22) இரவு குத்தியுள்ளார்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: