கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அமெரிக்க கடற்படையினரின் நிதி உதவியில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (28) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபேகுணவர்த்தனவும் அமெரிக்க கடற்படையின் சார்பில் லெப்டினன்ட் டேவ் கிறிஸ்ரின் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளதுடன், அத்தொகையினுள் பலதபப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் பதவியேற்று கடந்த 7 மாதங்களில் அமெரி்க்கா 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிள்ளது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment