23 Aug 2015

விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

SHARE
கடந்த 17ஆம் திகதி பொதுத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த எம்.எம்.றஸ்லான் (வயது 29) இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடியிலிருந்து வேலைக்கு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடியில் இவர் விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: