தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால், வாவி மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வாவியில் பிடிபடுக்கப்படும் மீன்கள் ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறினர். வெப்பநிலை அதிகமாக உள்ளதினால்; மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு மீனவர்கள் செல்கின்றமை குறைவடைந்துள்ளது. இந்த நிலையில், வாவியில் மீன்பிடி நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மணலை உள்ளிட்ட மீன்கள் பிடிபடுவதாகவும் வாவி மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவி மீன்பிடியை நம்பி 13,265 வாவி மீனவத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று அம்மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ருக்ஷான் குறூஸ் தெரிவித்தார் -
0 Comments:
Post a Comment