மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுங்கட்சியிலிருந்து தமிழர் ஒருவரை அபிவிருத்தி குழுத்தலைவராக தெரிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவதனால் இம் மாவட்டத்தில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் செ.அரசரெத்தினம் தெரிவித்தார்.
இதனால் முஸ்லிம் தலைமைகள் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவியையும் பெற்று அபிவிருத்திக்குழுத் தலைவராகவும் இருந்து பல அபிவிருத்திகளை செய்து வருகின்றனர். இதனால் 74 சதவீதத்துக்கும் மேல் வாழும் தழிழர்கள் கல்வி,பொருளாதாரம், கட்டுமானம் அனைத்திலும் பின்னடைவைச் சந்தித்துவருகின்றோம். இந்நிலை மாற்றப்பட்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்திகளை செய்ய வேண்டும் இதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்
0 Comments:
Post a Comment