தமது சுயநல சுகபோகங்களுக்காகவும் எமது மக்களது தமிழ்த் தேசிய உணர்வினை சிதைப்பதற்காகவும் பேரினவாதிகளினால் களமிறக்கப்பட்டவர்கள், எமது பிரதிநிதித்துவத்தை மாற்று இனத்துக்கு தாரைவார்த்து விட்டு தமது வெகுமதிக்காக இன்று இவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் என கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
தமது சுயநல சுகபோகங்களுக்காகவும் எமது மக்களது தமிழ்த் தேசிய உணர்வினை சிதைப்பதற்காகவும் பேரினவாதிகளினாலும் மற்றைய இனத்தவர்களினாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறக்கப்பட்டவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பணியினை செவ்வனே நிறைவேற்றி எமது பிரதிநிதுவத்தை மாற்று இனத்துக்கு தாரைவார்த்துவிட்டு தமது வெகுமதிக்காக இன்று அவர்கள் காத்துக்கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வேட்பாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்றத் தெரிவில் நான் தவறவிடப்பட்டமை எனது தமிழ்த் தேசிய உணர்விலோ அதற்கான செயற்பாட்டிலோ எந்தவித தளர்வையும் ஏற்படுத்தவில்லை மாறாக அதை வலுப்படுத்தியுள்ளது.
ஏனெனில் பாராளுமன்ற பதவிக்காகவோ அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காகவோ தமிழ்த் தேசியத்தின் பக்கம் வந்தவனும் அல்ல. நேற்றுப் பெய்த மழைக்கு இன்று குடைபிடித்தவனும் அல்ல. தமிழ்த் தேசியம் எனது உணர்விலும் உயிரிலும் கலந்த ஒன்று.
எமது மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் சிறந்த சந்தர்ப்பம் இம்முறை இருந்தது, இது தொடர்பாக எம்மால் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த அரிய வாய்ப்பு நழுவவிடப்பட்டமை பெருமைக்குரிய விடயம் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
தமது சுயநல சுகபோகங்களுக்காகவும் எமது மக்களது தமிழ்த் தேசிய உணர்வினை சிதைப்பதற்காகவும் பேரினவாதிகளினாலும் மற்றைய இனத்தவர்களினாலும் களமிறக்கப்பட்டவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பணியினை செவ்வனே நிறைவேற்றி எமது பிரதிநிதித்துவத்தை மாற்று இனத்துக்கு தாரைவார்த்து விட்டு தமது வெகுமதிக்காக இன்று இவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதுவும் எம்மால் எதிர்வு கூறப்பட்டதே.
எதிர்காலத்திலாவது இத்தகைய வரலாற்றுத் தவறு இடம்பெறக் கூடாது என்பதுடன் இத்தேர்தல் கற்றுத் தந்த பாடத்தை உணர்ந்து எதிர்காலத்தில் ஒன்றாக இணைவோம் தமிழ்த் தேசியம் காப்போம் என உறுதிபூணுவோம்.
0 Comments:
Post a Comment