
என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 30வருடகால சிரேஸ்ட உறுப்பினருமான மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தமிழ்மக்கள் நான் பொதுப்பட கேட்டுக்கொண்டதற்கிணங்க இம்முறைத் தேர்தலில் 45ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர்.
கடந்த 2010 பாராளுமன்றத்தேர்தலில் 26894 வாக்குகளை அளித்திருந்தனர். கடந்த கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் சுமார் 44ஆயிரம் வாக்குகளை அளித்திருந்தார்கள்.இம்முறை 45213 வாக்குகளை வழங்கியுள்ளனர்.
இந்த வாக்குகள் ஒட்டுமொத்த தமிழர்களின் பேரம்பேசும்சக்தியையும் ஆட்சியமைக்கும் மூன்றாவது பெரும் சக்தியாகவும் உருவெடுக்கவைத்துள்ளது. எனவே வாக்களித்த அனைத்து தமிழ்மக்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பைசிக்கிளில் வந்தவர்களை தமிழ்மக்கள் முற்றாக ஓரங்கட்டி முகவரியையே இல்லாமல் செய்துவிட்டார்கள். எனினும் யானையில் வந்த ஹெலிக்கு சிலஆயிரம் வாக்குகளை தாரைவார்த்துள்ளனர். ஆறுகடக்கும் வரைதான் அண்ணன் தம்பி என்பதை வாக்களித்தவர்கள் மறந்து விடக் கூடாது.
தமிழ் மக்களின் வாக்குப்பலமே நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலினூடாக நிலையான நிரந்தரமான ஆட்சியை தீர்மானிக்கும். அத்துடன் தமிழ்மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வுக்கும் இட்டுச் செல்லும்.
அதேவேளை மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச நெஞ்ச வால்களும் இத்தேர்தலின்மூலம் வடகிழக்கில் ஓரங்கட்டப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்து நாட்டில் அராஜக ஆட்சிபுரிந்த மகிந்தவை விரட்டியடித்தது போன்று இந்த தேர்தலிலும் தமிழ்பேசும் மக்கள் ஒருமித்தகருத்துடன் வாக்களித்தமை குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.
இந்த தேர்தலில் தமிழ்மக்கள் வழங்கிய ஆணையினூடாக புதிய பாராளுமன்றமும் ஜனாதிபதியும் தமிழ்மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும்.அதனூடாக தமிழ்மக்களும் தானும் ஒரு “இலங்கையன்” என்று இதயசுத்தியுடன் சொல்வதற்கு வழிசமைக்கும். விளைவாக நாட்டில் நிரந்தரமான சமாதானமும் நல்லிணக்கமும் சுபீட்சமும் நிலவும். என்றார்
0 Comments:
Post a Comment