
அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல் வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (27) காலமானார். நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும் நாளேடுகளில் விமர்சித்து வந்தார்.
விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்பகாலங்களில் பணியாற்றியிருந்தார்.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும், பாண்டித்தியம் பெற்ற அவர், இரண்டு மொழிகளிலும் ஆக்கங்களை எழுதியிருந்தார்.
மட்டக்களப்பிலுள்ள மன்று என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகராக விளங்கிய அவர், கிழக்கு மாகாணத்தில் பல சமூக அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டார்.
விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட இவர், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து பல ஆக்கங்களையும் எழுதியிருந்தார்.
1958ஆம் ஆண்டு பிறந்த சாந்தி சச்சிதானந்தத்திற்கு 2 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளார். இவரது கணவர் மனோ ராஜசிங்கம் 2009ஆம் ஆண்டு காலமானமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment