149ஆவது பொலிஸ் தினம் இன்று திருகோணமலையில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது,திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள 11 பொலிஸ் நிலையங்களைச் சேரந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படை வீரர்களும் மரியாதை அணிவகுப்பு வழங்கினார்கள்.
இந்நிகழ்வில்,கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ பிரதம் அதிதியாகவும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபேய குணவர்த்தன, மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி, கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எச்.எம்.ஜே.ரசைறோ, சீனக்குடா விமானப்படை தளபதி எயார் கொமடோர் சாகர கொட்டகதெனிய, இராணுவத்தின் 22வது படைப்பரிவு கட்டளையிடும் அதிகாரி பிரிஹேடியர் ரோகித தர்மசிறி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
மெக்கெய்சர் விளையாட்டு மைதான முன்னறில் ஆரம்பித்த இந்த அணிவகுப்பு கடற்படைத்தள வீதி, பிரதான விதி வழியாக திருகோணமலை பொலிஸ் தலைமையத்தை சென்றடைந்தது.
0 Comments:
Post a Comment