11 Aug 2015

போதைப்பொருள் ஒழிப்பு மாத்தை முன்னிட்டு திருமலையில் விழிப்புணர்வு பேரணி

SHARE

போதைப்பொருள் ஒழிப்பு மாத்தை முன்னிட்டு “என்றும் போதையற்ற ஒழுக்கம் நாட்டுக்கு தேவை” எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டத்திற்கமைய திருகோணமலை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு பேரணியொன்று கடந்த 07 ஆம்  திகதி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்னால் ஆரம்பித்த இவ்விழிப்புணர்வு பேரணி திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் நிறைவடைந்தது. மத்திய பேரூந்து நிலையத்திற்கருகாமையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப்பிரசுர விநியோகமும் பொது மக்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, கந்தளாய் பிரதேச செயலாளர் திரு பிரேமதாச, திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திரு அருள்ராஜ், கிராம உத்தியோகத்தர்கள்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: