19 Aug 2015

வாக்களித்த மக்களுக்கு பாராட்டு

SHARE

கட்சியின் இருப்பையும் மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாப்பதற்கு ஒன்றுதிரண்டு வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களின் சமூக உணர்வை பாராட்டுவதாக நடைபெற்ற முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்; தெரிவித்தார்.

நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கு காரைதீவு மாளிகைக்காடு எல்லை செவ்வாய்க்கிழமை  (18) இரவு வரவேற்று அளிக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,  'அம்பாறை மாவட்ட மக்கள் பிரதேசவாதம், ஊர்வாதம் என்ற வாதங்களையெல்லாம் தாண்டி தனிப்;பட்ட விருப்பு, வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு எனக்கு  வாக்களித்து மூன்றாவது முறையாகவும் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்து சாதனை படைக்க உதவிய மக்களுக்கு  நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.

மேலும, இந்த வெற்றியின் ஊடாக எமது மக்கள் வேண்டி நிற்கும் அபிவிருத்திகளையும் அபிலாஷைகளையும் குறிப்பாக, கட்சியை பாதுகாப்பதற்காக முன்னின்று உழைத்த இளைஞர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றித்தர பாடுபடுவேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: