மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அலுவலர்களின் மாவட்ட ரீதியான இடமாற்றம் தொடர்பில் தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்க உறுப்பினர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பு மாவட்ட செயலகத்தில்; நேற்று காலை நடைபெற்றது. இதன்போதே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியதாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்தின்; செயலாளர் த.சிறிநாதன் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர், தேர்தல் முடிந்தவுடன் இதற்கான நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம அலுவலர்களை உள்ளீர்த்த வகையில் செயற்படும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்துக்கான நிரந்தர அலுவலகத்தை அமைப்பதற்குரிய காணியை பெற்றுத் தருமாறும் தாம் வேண்டுகோள் விடுத்த நிலையில், காணியை பெற்றுத் தருவதாக அரசாங்க அதிபர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது, கிராம அலுவலர்கள் மனச்சாட்சியுடன் சிறந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.
0 Comments:
Post a Comment