இம்முறை இடம் பெறவிருக்கும் தேர்தலின் போது கிராம உத்தியோகத்தர்கள் சிரேஸ்ர தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் சம்மந்தமான அறிக்கை ஒன்றினை தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும், என மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஞானசிறி தலமையிலான குழுவினருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் செவ்வாய்க் கிழமை (12) ; இடம் பெற்றது இதன் போதே சங்கத்தினரிடம் உறுதியளித்ததாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
தேர்தலின் போது சிரேஸ்ர தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் கிரம சேவை உத்தியோகத்தர்கள் சம்பந்தமாக தேர்தல் திணைக்களத்திற்கு இரகசிய அறிக்கை இடுவது போல் இம்முறை கிராம உத்தியோகத்தர்களும் சிரேஸ்ர தலமைதாங்கும் உத்தியோகத்தர்கள், லிகிதர்கள் சம்பந்தமாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிக்கை இடமுடியும். என இச்சந்திப்பின் போது மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சங்கத்தினரிடம் உறுதியளித்துள்ளார். இதனைவிட தேர்தல் சம்பந்தமாக கிரம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்
இதனைத் தவிர புதிதாக நியமனம் பெற்றுள்ள கிரம உத்தியோகத்தர்களுக்கு அலுவலகப்பை மற்றும் இலட்சணை வழங்கல், அரச கட்டிடங்களில் அலுவலகம் வைத்திருக்கும் கிரம உத்தியோகத்தர்களுக்கு அதற்கான பராமரிப்புச் செலவு வழங்கல், கிரம சேவகர் பிரிவுகளில் இடம் பெறும் நிகழ்வுகளில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோரின் வருகையினை கிரம உத்தியோத்தர்களுக்கு தெரிய வழிசமைத்தல், பிரயாண கொடுப்பனவுகள் வழங்ல், காகிதாதிகள் வழங்கப்படாமல் இருக்கும் பிரிவுகளுக்கு உடன் காகிதாதிகள் வழங்கப்பட வேண்டும், மற்றும் சங்கத்திற்கு நிலையான கட்டடம் ஒன்றினை அமைப்பதற்கான அரசகாணியினை பெற்றுக்கொள்ளல் போன்ற கோரிக்கைகள் சங்கத்தினரினால் முன் வைக்கப்பட்டதாகவும் இவை அனைத்தையும் நிறைவேற்றும் பொருட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் உடன் பணிப்புரை வழங்கியதாகவும் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment