30 Aug 2015

பிரபாகரன் தற்கொலை செய்திருக்கலாம்: கருணா

SHARE

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேகச் செய்தியிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

“இறுதிப் போரில் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அண்டனி உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் ஷெல் வீச்சில் உயிரிழந்துவிட்டதாக உறுதியான தகவல் உண்டு.
இதனைத் தொடர்ந்து இளைய மகன் பாலச்சந்திரனுடன் பிரபாகரன் இடம்பெயரும் போது பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரபாகரன் தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

வலது கை பழக்கம் உள்ள பிரபாகரன், இடப் பக்கத்தில் இருந்த கைத் துப்பாக்கியை வலது கையால் எடுத்து நெற்றிப் பொட்டின் மீது வைத்து சுட்டிருந்ததால்தான் அவரது தலை பிளவுபட்டுள்ளது. 

நிச்சயமாக இலங்கை இராணுவத்திடம் உயிரோடு பிடிபடும் சூழ்நிலையை பிரபாகரன் விரும்பமாட்டார். அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை தமது ஆட்சிக் காலத்தில் இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் போய்விட்டார்” எனவும் கருணா மேலும் தெரிவித்துள்ளார்.(tmn)

SHARE

Author: verified_user

0 Comments: