மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில், தேர்தல்கள் அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர்கள் இடையூறு செய்யப்பட்ட சம்பவத்தினையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்பவத்தினையடுத்து, காத்தான்குடி பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அத்துடன், தேர்தல்கள் நிறைவடையும் வரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலதிக கலவரங்களை அடக்குகின்ற படையினரை ஈடுபடுத்தல், வாழைச்சேனை, சாய்ந்தமருது மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் பரபரப்பான நிலைமையொன்று காணப்படுவதனாலும் தேர்தல் தினத்தன்று வன்முறைகள் நிகழ்வதற்கான சாத்தியம் காணப்படுவதனாலும் அப்பிரதேசத்திற்கும் அப்பிரதேசங்களின் வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் மேலதிக பாதுகாப்பை வழங்க உரிய நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களுடன், உடனடியாக காத்தான:குடியில் நடைபெற்ற சம்பவங்களுக்கான விசாரணகைள் மேற்கொள்ளப்படடு நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பிலிருந்து விசேட பிரதிநிதி ஒருவரும் காத்தான்குடி பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தேர்தல் அதிகாரிகள் செயற்பட மாட்டார்கள் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார்.
பக்கச்சார்பின்றி தமது அதிகாரிகள் செயற்படுவதாகவும் நீதியான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவுகளையடுத்து மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் உத்தியோகஸ்தர்களையும் காத்தான்குடியில் தாக்க முற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவர் ஆகியோர் நேற்று முன்தினம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். என்பதும் அவர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment