செட்டியாளையத்திலிருந்து காத்தான்குடிக்கு மேசன் வேலைக்குச் சென்ற எனது மகன் இன்றுவரை வீடு திரும்பிவரவில்லை, என மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் தெற்கைச் சேர்ந்த வடிவேல் மகேஸ்வரி என்ற தாய் காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சனிக்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வைத்து, முறைபாடு தெரிவித்தார்.
இந்த முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…
வடிவேல் சிவகுமார் என்ற 27 வயதான எனது மகன், கடந்த 2007.11.09 அன்று எமது வீட்டிலிருந்து காத்தான்குடிக்கு மேசன் வேலைக்காகச் சென்றார். அவர் இன்றுவரை வீடு வந்து சேரவில்லை அவர் வேலைக்குச் சென்ற இடத்திலும், ஏனைய பகுதிகளிலும் தேடினோம் கிடைக்க வில்லை, அப்போது ஆரையம்பதியில் கருணா அம்மானின் தலைமையிலான குழுpனர், முகாமிட்டிருந்தர்கள். அவர்கள்தான் எனது மகனைப் பிடித்துள்ளார்கள்.
எனது மகன் தொடர்பில் ஐ.சி,ஆர்.சி, பொலிசாரிடமும் முறையிட்டோம் இதுவரையில் எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை. எனது ஒரே ஒரு ஆண்பிள்ளையை எங்கிருந்தலும் மீட்டுத்தாருங்கள் என கண்ணீர் மல்க வடிவேல் மகேஸ்வரி என்ற தாய் முறைப்பாடு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment